Monday 19 March 2012

VAO :மாவட்ட வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு


       கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் காலியாக இருந்த வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. பொதுப் பிரிவில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 384 இடங்களுக்கு தேர்வு நடந்தது. அதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான ஆயிரத்து 77 குறைவு காலிப் பணியிடங்களும் அடக்கம். 7 லட்சத்து 76 ஆயிரத்து 156 பேர் தேர்வினை எழுதினர்.தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு வெளியாகின.  தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணியிடங்களை ஒதுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தேர்வில் வெற்றி பெற்ற அனைவரின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3 முதல் 18-ம் தேதி வரையிலும், செப்டம்பர் 26 முதல் 30 வரையிலும் நடைபெற்றன. 
 
 இணையதளத்தில் வெளியீடு: இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெயரும், வி.ஏ.ஓ.க்களின் தேர்வெண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.  மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்தப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒவ்வொரு கோட்டம் வாரியாக வி.ஏ.ஓ.க்களை பிரித்து அளிப்பார். இறுதி உத்தரவுகளை கோட்டாட்சியர்கள் பிறப்பிப்பார்கள்.  அவர்களிடம் இருந்து உத்தரவுகளைப் பெற்ற வி.ஏ.ஓ.க்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 45 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி அடுத்த வாரத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.

Thursday 15 March 2012

TET தேர்வு: TRB விளக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: பி.லிட். படித்தவர்கள் எந்தத் தாளை எழுதலாம்? தேர்வு வாரியம் விளக்கம்

        ஆசிரியர் தகுதித் தேர்வில் பி.லிட். தமிழ்ப் பட்டதாரிகள் எந்தத் தாளை எழுதுவது என்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை முதல் தாளும், பிற்பகல் இரண்டாம் தாளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் முதல் தாள் தேர்வையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் இரண்டாம் தாள் தேர்வையும் எழுதலாம்.  பி.லிட். மற்றும் பி.எட். படித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பி.லிட். படிப்போடு டிப்ளமோ படித்தவர்கள், புலவர் பயிற்சி முடித்தவர்கள் எந்தத் தாளை எழுத வேண்டும் என்பது தொடர்பாக பலர் விளக்கம் கேட்டு வருகின்றனர்.  இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:  பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு ஆசிரியர் டிப்ளமோ பட்டத்தையும், அதன் பிறகு பி.லிட். பட்டமும் பெற்றவர்கள் முதல் தாளையும், இரண்டாம் தாளையும் எழுதலாம்.  பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு பி.லிட். பட்டமும், புலவர் பயிற்சியும் முடித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம்.  இணையதளத்தில் வெளியீடு: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் எளிய வினா, விடை அமைப்பிலான தகவல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளன.  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இவை வெளியிடப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday 13 March 2012

VAO பணி:ஓரிரு நாள்களில் உத்தரவு

வி.ஏ.ஓ.க்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு: ஓரிரு நாள்களில் உத்தரவுகளை அளிக்க நடவடிக்கை

  புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணியிடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.  அதற்கான உத்தரவுகள் ஓரிரு நாள்களில் வழங்கப்படும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகம் முழுவதும் காலியாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. பொதுப்பிரிவில் காலியாக இருந்த 2 ஆயிரத்து 407 பணியிடங்களுக்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் ஆயிரத்து 77 இடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்க 10 லட்சத்து 44 ஆயிரத்து 119 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில், 85 ஆயிரத்து 384 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ளவர்களில் 7 லட்சத்து 76 ஆயிரத்து 156 பேர் தேர்வினை எழுதினர்.  முடிவுகள் வெளியீடு: பொதுப் பிரிவினருக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு ஜூலையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பரிலும் வெளியாகின. தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டு முடிவடைந்தபோதும் வெற்றி பெற்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படாமல் இருந்தன. 
 
    இந்த நிலையில், பணியிடங்களை ஒதுக்கும் பணிகள் இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தேர்வில் வெற்றி பெற்ற அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு அவர்களிடம் எந்த மாவட்டத்தில் பணிபுரிய விருப்பம் என்பதும் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் மாவட்ட ஒதுக்கீட்டுக்காகக் காத்திருந்தனர்.  ஒவ்வொரு மாவட்டத்துக்கு எத்தனை வி.ஏ.ஓ.க்கள் தேவை என்பதும், அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்படும். அவர் ஒவ்வொரு கோட்டம் வாரியாக வி.ஏ.ஓ.க்களை பிரித்து அளிப்பார். இறுதி உத்தரவுகளை கோட்டாட்சியர்கள் பிறப்பிப்பர்.  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்களுக்கான பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சில நாள்களில் அதற்கான உத்தரவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
 முதல்வர் வழங்குகிறார்: வி.ஏ.ஓ.க்களுக்கான உத்தரவுகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. 20 வி.ஏ.ஓ.க்களுக்கான உத்தரவுகளை அவர் வழங்குவார் எனத் தெரிகிறது.

Wednesday 7 March 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு - JULY 12-ல் நடக்கிறது

 TRB அறிவிப்பு.

     TNTET (TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST) எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 22 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் : ஏப்ரல் 4 ஆம் தேதியாகும். TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும் நாள்: முதல் தாள்- JULY 12 -ஆம்  தேதி முற்பகல்,  இரண்டாம் தாள் - JULY 12   -ஆம்  தேதி பிற்பகல் நடைபெறும்.


 இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  
     ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை எழுதலாம். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். JULY 12-ம் தேதி காலை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வும், பிற்பகலில் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும்.

முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150
                1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -             30 மதிப்பெண்
    4. Maths                                                    -            30 மதிப்பெண்
    5. Environmental studies                           -              30 மதிப்பெண்
இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.
1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -            30 மதிப்பெண்
    4. Maths and Science                                -            60 மதிப்பெண்
2. சமுக அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -            30 மதிப்பெண்
    4. Social Studies                                        -            60 மதிப்பெண்
2. தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil  or other language                       -              30 மதிப்பெண்
                3. English                                                 -             30 மதிப்பெண்
    4. Maths&Science அல்லது Social Studies  -      60 மதிப்பெண்
சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும்.

       அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உரிய தகுதிகளுடன் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக 2010, ஆகஸ்ட் 23 அல்லது அதற்குப் பிந்தைய தேதிகளில் பணியில் சேர்ந்தவர்கள் இந்தத் தகுதித் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.  தனியார் பள்ளிகளில் உரிய தகுதி இல்லாமல் பணியாற்றும் ஆசிரியர்கள், 5 ஆண்டுகளுக்குள் அந்தத் தகுதியைப் பெற்று இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியில் சேர விரும்புவோர் அனைவரும் இந்தத் தேர்வை எழுத வேண்டும்.  

தேர்வை எழுதுவதற்கான தகுதி
     பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பிறகு, அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பட்டயம் பெற்றவர்கள் (பார்வைத் திறன் இல்லாதவர்கள் தவிர) ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம்.  பி.ஏ., பி.எஸ்சி., பி.லிட்., இளநிலை படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் பாடங்களில் பட்டம் பெற்ற பிறகு ஆசிரியர் கல்வியில் இளநிலைப் பட்டம் (பி.எட்.) பெற்றவர்கள் இரண்டாம் தாளை எழுத வேண்டும்.  ஆசிரியர் பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம். 

150 மதிப்பெண்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருக்கும். 90 நிமிஷங்கள் நடைபெறும் இந்தத் தேர்வில் மல்டிபிள் சாய்ஸ் வடிவில் வினாக்கள் இடம்பெறும். இரண்டாம் தாளிலும் அதேபோன்று 150 மதிப்பெண்ணுக்கு மல்டிபிள் சாய்ஸ் வடிவில் வினாக்கள் இடம்பெறும்.  இதற்கான பாடத்திட்டம் விண்ணப்பத்துடனான குறிப்பேட்டில் இடம்பெற்றிருக்கும். இந்த இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்தச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.  தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற விரும்பும் அனைவரும் இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இந்தத் தேர்வு ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதியை மட்டுமே வழங்குகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியராகிவிட முடியாது. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அரசு அறிவிக்கும் வழிமுறைகளில் பின்னர் தேர்ந்தெடுக்கப்படுவர். 

66 கல்வி மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் உள்ள 66 கல்வி மாவட்டங்களிலும் தேர்வு நடைபெறும். மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ரூ.50 செலுத்தி மார்ச் 22 முதல் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.500 (தாழத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணம் ரூ.250).  முதல் தாள் அல்லது இரண்டாம் தாள் அல்லது இரண்டு தாள்களையும் எழுதுவோர் ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது.  ஏப்ரல் 4-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது


மேலும் விவரங்களுக்கு காண்க: www.trb.tn.nic.in/

Sunday 4 March 2012

16,000 பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு

பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டன.
 
          தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் அஞ்சல் வழியில் சனிக்கிழமை அனுப்பப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் இந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளன. தாற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமனம் செய்யப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Saturday 3 March 2012

TRB Coaching Centers List

TRB Coaching Centers in Tamilnadu
List of TRB exam coaching centres in Madurai, Kanchipuram, Vellore, Chennai, Villupuram, Dharmapuri and rest of Tamilnadu are  listed here.
1.Athiyaman coaching center, Dharmapuri.
   Mobile: 9489170900
2.VIDIYAL COACHING CENTER,
   @Voorhees Hr.Sec.School, Officers line,
   VELLORE. Mobile No.9092997509, 8220021681. 
   (Class: Saturday & Sunday)
3.Nalanda Kanchipuram Center:
Pachiyappan Higher Secondary School,
Near Mongil Mandabam,
Kanchipuram - 631501.
(Class: Saturday & Sunday)
Ph: 044 - 27238311
Nalanda Chennai Centre:Ramakrishna Mission Matriculation School,
(South),Barkit Road, Near T.Nagar bus stand,
Chennai - 600017.
(Class: Saturday & Sunday)
Mobile: 9443738311, 9943587919.
4.SRI SAI COACHING CENTER
(Sri Sai Educational Trust)
2/25,Raja Mill Road, (Near Mangayarkarasi Middle School)
Madurai – 625001,
Tamilnadu, INDIA.
Cell: 9363206725, 9791352522, 9750517739, 9842189492
5.Appolo Study Center
No: 25, Nandhi Loop Street,
West C.I.T.Nagar, Chennai-35.
(Near T.Nagar Bus Stand) Near Nandhi Statue
Phone   :   24339436, 42867555,
Mob      :  98400 99828, 9840226187
6.National Coaching Center.
   Villupuram. Mobile: 9842645387.