Monday, 6 February 2012

TNPSC:புதிய அறிவிப்புகள் விரைவில்....

            GROUP-IV, GROUP-II & GROUP-I  அறிவிப்புகள் வெளியாகிறது.

       TNPSC நடத்தும் GROUP-IV, GROUP-II மற்றும் GROUP-I தேர்வுகளுக்கான புதிய அறிவிப்புகள் விரைவில்  வெளியாகும் எனத் தெரிகிறது. திரு.நடராஜ் தலைவராகப் பொறுப்பேற்றபின் சில தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டார். தற்போது GROUP-IV, GROUP-II மற்றும் GROUP-I தேர்வுகளுக்கான புதிய அறிவிப்புகளையும் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன . அவ்வாறு வெளியிடும்போது GROUP-IV, GROUP-II மற்றும் GROUP-I ஆகிய தேர்வுகளுக்கான அறிவிப்பு, விண்ணப்பிக்க கடைசி நாள் , தேர்வு நாள் மற்றும்  தேர்வு முடிவு நாள் ஆகியவையும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு மாத கால இடைவெளிகளில் ஒவ்வொரு தேர்வாக இந்த தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிகிறது. எனவே தொடர்ந்து தேர்வுக்கு தயாராகும் போட்டித் தேர்வு மாணவர்கள் இந்த மூன்று தேர்வுகளையும் எழுதும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

குரூப் 2, வி.ஏ.ஓ. பணியிட உத்தரவு: விரைவில்

விரைவில் வெளியாகிறது குரூப் 2, வி.ஏ.ஓ. பணியிட உத்தரவு : முறைகேட்டுக்கு இடம் அளிக்காமல் இருக்க தமிழக அரசு தீவிரம்

       குரூப் 2, கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கான பணியிடங்களை ஒதுக்குவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.தேர்வுகளை ரத்து செய்யவோ அல்லது பணியிடங்களை ஒதுக்காமல் காலம் தாழ்த்தும் எண்ணமோ இல்லை என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட ஆயிரத்து 628 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கான பட்டதாரிகள் எழுதினர்.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். குரூப் 2 தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியானது. மேலும், அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தெந்த அரசுத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்கிற விவரமும் வெளியிடப்பட்டது. ஆனால், உரிய உத்தரவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது.கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியானாலும், பணியிட உத்தரவு வெளியாகவில்லை. 
     இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் வீடுகள், அவர்களின் அலுவலக அறைகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆறு வார காலத்துக்குள் பணியிடங்களுக்கான உத்தரவை வழங்க வேண்டும் என ஆணையிட்டது. அந்த ஆறு வார காலம் பிப்ரவரி 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.விரைவில்... பணியிடங்களுக்கான உத்தரவை வெளியிடுவதில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஆனாலும், முறைகேடான வழிகளில் யாரும் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பதவிகளைப் பிடித்து விடாமல் இருக்கவும் தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இதற்கான மனுவை உயர் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் இணைச் செயலாளர் சார்பில் இந்த மனு தாக்கல் ஆகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 
        குரூப் 2 தேர்வு உள்பட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பல்வேறு தேர்வுகளில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்ட அரசுப் பதவியில் உள்ளோர், தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணியாளர்களைத் தேர்வு செய்தது தொடர்பாக சில ரகசிய ஆவணங்களும், முறைகேட்டுப் புகார்கள் தொடர்பான ஆதாரங்களும்  கைப்பற்றப்பட்டுள்ளன. பணியாளர்களைத் தேர்வு செய்ததிலும், மதிப்பெண்கள் வழங்கியதிலும், முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முறைகேடுகள்-ஊழல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்குப் பணியிடங்களை ஒதுக்கினால் அது நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும். எனவே, முறைகேட்டுப் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போன்ற நபர்கள் பணிகளைப் பெறும்போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்படும். 
நிபந்தனையுடன் பணியிட உத்தரவு... எனவே, "பணியிட உத்தரவுகள் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்பட்டது' என்பதைக் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் தவறான வழியில் ஒருவர் பணியில் சேர்ந்தார் என்பது விசாரணையின் முடிவில் தெரிய வந்தால் அவரை பணியில் இருந்து நீக்க வாய்ப்பு ஏற்படும்.எனவே, அரசின் நலன் கருதி இந்த அம்சத்தை ஏற்கெனவே வெளியிட்ட உத்தரவுடன் சேர்த்து வெளியிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது

Thursday, 2 February 2012

TNPSC CHAIRMAN நேர்காணல் - VIDEO

TNPSC தேர்வு : 8000 பேர் விரைவில் நியமனம் .

          TNPSC CHAIRMAN திரு.நடராஜ் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசுத் துறைகளில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கு சுமார் 8000 இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் விரைவில் நியமிக்கப் படுவார்கள் என்று தெரிவித்தார். இந்த GROUP -IV தேர்வானது பத்தாம் வகுப்பு கல்வி தரத்தில் TNPSC  ஆல் நடத்தப்படுவாகும். இந்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் போட்டித் தேர்வு மாணவர்கள் இப்போதே சமச்சீர் கல்வி உள்ளிட்ட பாடப் புத்தகங்களை படிக்கத் தொடங்கிவிட்டனர். 


திரு.நடராஜ் அவர்களின் நேர்காணலை VIDEO  வடிவில் காண இங்கே சொடுக்கவும்
 VIDEO PART-I    :  http://www.youtube.com/watch?v=O6kbIny7ffA 



Monday, 30 January 2012

TNPSC -யில் குறை தீர்வு மையம்

  TNPSC -யில் குறை தீர்வு மையம்


         தேர்வெழுதுபவர்களுக்காகவும், பொது மக்களுக்காகவும், டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் ஒரு குறைதீர்ப்பு மையம் திறக்கப்படும் என்று அதன் தலைவர் திரு.நடராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த மையத்தில், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 24ம் தேதி TNPSC தலைவராக பதவியேற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி ஆர்.நடராஜ், TNPSC தலைவர் என்ற முறையில் தனது திட்டங்கள் குறித்து கூறியதாவது, "இந்த மையமானது, சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும். TNPSC -ல் பலவிதமான பணிகளுக்காக விண்ணப்பிக்கும் லட்சக்கணக்கான மக்களுடன், TNPSC அதிகாரிகள் தொடர்புகொள்ளும் வகையில் எந்தவிதமான வசதியோ, திட்டமோ அல்லது செயல்முறையோ தற்போது கிடையாது.
TNPSC நடைமுறைகள் வெளிப்படையாக இருந்தால் மக்களுக்கு இதன்மீது அதிக நம்பிக்கைப் பிறக்கும். இந்த கமிஷனுக்கு ஆதரவளிப்பவர்களாகவும், அதன் வெற்றிக்கு முதுகெலும்பாகவும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், TNPSC பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும்.
குறைதீர்ப்பு மையம் கூடிய விரைவில் திறக்கப்படுவதோடு, வேறுவிதமான பயன்மிகு முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் நான் திட்டமிட்டு வருகிறேன்", என்றார்.

   அதன்படி விண்ணப்பதாரர்களின் குறையைத் தீர்க்க தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தங்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் நேரடியாகவோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.  தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாக வரும் விண்ணப்பதாரர்களின் மனுக்கள் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பெறப்படும். அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அன்று மாலை 4 முதல் 5.30 மணி வரை தகவல் தெரிவிக்கப்படும். தேர்வாணைய அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக கோரப்படும் தகவல்கள் யாவும் தொடர்புடைய பிரிவுகளால் பரிசீலிக்கப்படும். இதுகுறித்த தகவல்களை 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொலைபேசி வாயிலாக குறை தீர்ப்பு மையத்தை அணுகி, தேவையான தகவல்களைப் பெறலாம். இதற்காக தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலிருந்தும் தொடர்புகொள்ள 18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.  contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல்களைக் கோரிப் பெறலாம். மின்னஞ்சல் மூலமாகப் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் தகவல் அனுப்பப்படும். தபால் மூலம் தகவல்களைக் கோர வேண்டிய முகவரி: செயலாளர், குறை தீர்ப்பு மையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 1, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600006.  தபால் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் உரிய துறைகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு, தகவல்கள் 7 வேலை நாட்களில் அனுப்பப்படும்


VAO பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர்

   "வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி அருகே, கீழ்வாணியில் விலையில்லாப் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், கோபி கீழ்வாணி என்ற கிராமத்திற்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், 614 பயனாளிகளுக்கு, 32 லட்சம் மதிப்பிலான விலையில்லாப் பொருட்கள் வழங்கி பேசியதாவது:


வருவாய்த்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்து வருகின்றன. வி.ஏ.ஓ., பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டி உள்ளது. ஒரு கிராமத்தில் பணியமர்த்தப்பட்ட வி.ஏ.ஓ., மூன்று, நான்கு கிராமத்தை கவனித்து வருகின்றனர். இதனால், பணிச்சுமை அதிகரிக்கிறது. சட்டசபை கூட்டம் முடிந்தபின், தமிழக முதல்வர் உத்தரவுடன், துறை அதிகாரிகளை கலந்தாய்வு செய்து, வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

Friday, 27 January 2012

TNPSC: தேர்வு முடிவுகள் அறிவிப்பு

திரு.நடராஜ் பதவியேற்ற பின் வந்துள்ள முதல் முடிவு. 
   திரு.ஆர்.நடராஜ், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கடந்த 23 -ஆம் தேதி  பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு வாரத்துக்குள்ளாகவே முதல் முடிவுகளை வெளியிட்டு அசத்தியுள்ளார்.  அரசு அருங்காட்சியக துறையில்  காப்பாட்சியாளர்(CURATOR), உதவி காப்பாட்சியாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் விடுதி கண்காணிப்பாளர், மற்றும் தடய அறிவியல் துறையில் உதவியாளர் உள்ளிட்ட சின்ன சின்ன தேர்வுகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 27 )  வெளியிடப்பட்டன. இவற்றுள் சில, கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் அடுத்த மாதம்(பிப்ரவரி) நடைபெற உள்ளது. இதன்மூலம் ஊழல் குற்றச்சாட்டுகளால் முடங்கிக் கிடந்த தேர்வாணையத்துக்கு திரு.நடராஜ்  உயிர் கொடுத்துள்ளார். தேர்வு முடிவுகளை அறிய  http://www.tnpsc.gov.in/recruitnresults.htm  ஐ காண்க.
    தேர்வாணைய செயல்பாடுகளை எதிர்நோக்கி காத்திருந்த ஏராளமான இளைஞர்கள் இந்த தேர்வு முடிவுகளுக்குப் பின் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இனி ஒவ்வொன்றாக தேர்வு முடிவுகளும், தேர்வு அறிவிப்புகளும் வரும் என்கிற நம்பிக்கையில்  ஆவலோடு காத்திருக்கின்றனர். அடுத்த மாதம் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வுகள், பல ஆண்டுகளுக்குப் பின் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். 

எதிர்பார்க்கப்படும் தேர்வு அறிவிப்புகள்:
     இதே நம்பிக்கையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய தேர்வு அறிவிப்புகள்:
1 .GROUP-IV-ல் அடங்கிய  பணிகளுக்கான  தேர்வு .(Jr .Asst & Typist )
2 .GROUP-VII-ல் அறநிலையத் துறை  செயல் அலுவலர்  பணிகளுக்கான  தேர்வு
3 .GROUP-VIII- அறநிலையத் துறை  செயல் அலுவலர்  பணிக்கான  தேர்வு
4 .GROUP-III-ல் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி   பணிக்கான  தேர்வு
5 .GROUP-I-ல் அடங்கிய  பணிகளுக்கான  தேர்வு
6 .GROUP-II-ல் அடங்கிய  பணிகளுக்கான  தேர்வு
7 .DEO (மாவட்ட கல்வி அலுவலர்) தேர்வு
8 .LABOUR OFFICER தேர்வு 
    
வெளியிடத் தயாராகும் தேர்வு முடிவுகள் :
    கொள்குறி வகையிலான எழுத்துத் தேர்வுகள் முடிந்து, நேர்முகத் தேர்வுக்கான முடிவுகள் இன்னமும் வெளியிடப்படாத கீழ்கண்ட தேர்வுகளுக்கான முடிவுகளையும் விரைந்து வெளியிட தேர்வாணைய தலைவர் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1 .FOREST  APPRENDICE  தேர்வு.
2 .LABOUR OFFICER தேர்வு 
3. மாற்றுத் திறனாளிகளுக்கான GROUP-IV தேர்வு .
4 .Asst.Public Prosecutor தேர்வு .
5 .Child Development Project Officer தேர்வு
 
        மேலும் 2011 ஆம் ஆண்டில் நடந்த அதிக புகார்களுக்குள்ளான ஓரிரு தேர்வுகள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் மாவட்ட ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கும் VAO தேர்வாளர்களுக்கு மிக விரைவிலும்,  GROUP-II தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் தேர்வாளர்களுக்கு சர்ச்சைக்குரிய 186  ASO பணியிடங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் முடிவுக்குப் பின்னரும் ஆணைகள் வழங்கப்படலாம் என தெரியவருகிறது.
 

Thursday, 26 January 2012

சிவில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி

சிவில் நீதிபதி தேர்வுக்கு மனிதநேயம் அறக்கட்டளையின் இலவச பயிற்சி


  சென்னை: சைதை சா. துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் சிவில் நீதிபதிகள் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.  இது குறித்த செய்திக் குறிப்பு:  
நீதித்துறையில் தற்போது 185 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தமிழக அரசின் உள்துறையால் நடத்தப்படவுள்ளது. அந்தத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் பி.எல். பட்டதாரிகளுக்கான கட்டணமில்லா பயிற்சியை, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் நடத்த உள்ளது.  இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்துக்கு நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.  அவ்வாறு பதிவு செய்ய வரும் மாணவர்கள் "பாஸ்போர்ட்' அளவிலான புகைப்படத்தை கொண்டு வர வேண்டும். தொடர்புக்கு: 044-24358373, 9840106162.