Wednesday 7 March 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு - JULY 12-ல் நடக்கிறது

 TRB அறிவிப்பு.

     TNTET (TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST) எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 22 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் : ஏப்ரல் 4 ஆம் தேதியாகும். TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும் நாள்: முதல் தாள்- JULY 12 -ஆம்  தேதி முற்பகல்,  இரண்டாம் தாள் - JULY 12   -ஆம்  தேதி பிற்பகல் நடைபெறும்.


 இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  
     ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை எழுதலாம். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். JULY 12-ம் தேதி காலை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வும், பிற்பகலில் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும்.

முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150
                1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -             30 மதிப்பெண்
    4. Maths                                                    -            30 மதிப்பெண்
    5. Environmental studies                           -              30 மதிப்பெண்
இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.
1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -            30 மதிப்பெண்
    4. Maths and Science                                -            60 மதிப்பெண்
2. சமுக அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -            30 மதிப்பெண்
    4. Social Studies                                        -            60 மதிப்பெண்
2. தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil  or other language                       -              30 மதிப்பெண்
                3. English                                                 -             30 மதிப்பெண்
    4. Maths&Science அல்லது Social Studies  -      60 மதிப்பெண்
சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும்.

       அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உரிய தகுதிகளுடன் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக 2010, ஆகஸ்ட் 23 அல்லது அதற்குப் பிந்தைய தேதிகளில் பணியில் சேர்ந்தவர்கள் இந்தத் தகுதித் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.  தனியார் பள்ளிகளில் உரிய தகுதி இல்லாமல் பணியாற்றும் ஆசிரியர்கள், 5 ஆண்டுகளுக்குள் அந்தத் தகுதியைப் பெற்று இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியில் சேர விரும்புவோர் அனைவரும் இந்தத் தேர்வை எழுத வேண்டும்.  

தேர்வை எழுதுவதற்கான தகுதி
     பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பிறகு, அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பட்டயம் பெற்றவர்கள் (பார்வைத் திறன் இல்லாதவர்கள் தவிர) ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம்.  பி.ஏ., பி.எஸ்சி., பி.லிட்., இளநிலை படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் பாடங்களில் பட்டம் பெற்ற பிறகு ஆசிரியர் கல்வியில் இளநிலைப் பட்டம் (பி.எட்.) பெற்றவர்கள் இரண்டாம் தாளை எழுத வேண்டும்.  ஆசிரியர் பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம். 

150 மதிப்பெண்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருக்கும். 90 நிமிஷங்கள் நடைபெறும் இந்தத் தேர்வில் மல்டிபிள் சாய்ஸ் வடிவில் வினாக்கள் இடம்பெறும். இரண்டாம் தாளிலும் அதேபோன்று 150 மதிப்பெண்ணுக்கு மல்டிபிள் சாய்ஸ் வடிவில் வினாக்கள் இடம்பெறும்.  இதற்கான பாடத்திட்டம் விண்ணப்பத்துடனான குறிப்பேட்டில் இடம்பெற்றிருக்கும். இந்த இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்தச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.  தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற விரும்பும் அனைவரும் இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இந்தத் தேர்வு ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதியை மட்டுமே வழங்குகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியராகிவிட முடியாது. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அரசு அறிவிக்கும் வழிமுறைகளில் பின்னர் தேர்ந்தெடுக்கப்படுவர். 

66 கல்வி மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் உள்ள 66 கல்வி மாவட்டங்களிலும் தேர்வு நடைபெறும். மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ரூ.50 செலுத்தி மார்ச் 22 முதல் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.500 (தாழத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணம் ரூ.250).  முதல் தாள் அல்லது இரண்டாம் தாள் அல்லது இரண்டு தாள்களையும் எழுதுவோர் ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது.  ஏப்ரல் 4-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது


மேலும் விவரங்களுக்கு காண்க: www.trb.tn.nic.in/

No comments:

Post a Comment