Friday 27 January 2012

TNPSC: தேர்வு முடிவுகள் அறிவிப்பு

திரு.நடராஜ் பதவியேற்ற பின் வந்துள்ள முதல் முடிவு. 
   திரு.ஆர்.நடராஜ், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கடந்த 23 -ஆம் தேதி  பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு வாரத்துக்குள்ளாகவே முதல் முடிவுகளை வெளியிட்டு அசத்தியுள்ளார்.  அரசு அருங்காட்சியக துறையில்  காப்பாட்சியாளர்(CURATOR), உதவி காப்பாட்சியாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் விடுதி கண்காணிப்பாளர், மற்றும் தடய அறிவியல் துறையில் உதவியாளர் உள்ளிட்ட சின்ன சின்ன தேர்வுகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 27 )  வெளியிடப்பட்டன. இவற்றுள் சில, கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் அடுத்த மாதம்(பிப்ரவரி) நடைபெற உள்ளது. இதன்மூலம் ஊழல் குற்றச்சாட்டுகளால் முடங்கிக் கிடந்த தேர்வாணையத்துக்கு திரு.நடராஜ்  உயிர் கொடுத்துள்ளார். தேர்வு முடிவுகளை அறிய  http://www.tnpsc.gov.in/recruitnresults.htm  ஐ காண்க.
    தேர்வாணைய செயல்பாடுகளை எதிர்நோக்கி காத்திருந்த ஏராளமான இளைஞர்கள் இந்த தேர்வு முடிவுகளுக்குப் பின் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இனி ஒவ்வொன்றாக தேர்வு முடிவுகளும், தேர்வு அறிவிப்புகளும் வரும் என்கிற நம்பிக்கையில்  ஆவலோடு காத்திருக்கின்றனர். அடுத்த மாதம் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வுகள், பல ஆண்டுகளுக்குப் பின் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். 

எதிர்பார்க்கப்படும் தேர்வு அறிவிப்புகள்:
     இதே நம்பிக்கையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய தேர்வு அறிவிப்புகள்:
1 .GROUP-IV-ல் அடங்கிய  பணிகளுக்கான  தேர்வு .(Jr .Asst & Typist )
2 .GROUP-VII-ல் அறநிலையத் துறை  செயல் அலுவலர்  பணிகளுக்கான  தேர்வு
3 .GROUP-VIII- அறநிலையத் துறை  செயல் அலுவலர்  பணிக்கான  தேர்வு
4 .GROUP-III-ல் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி   பணிக்கான  தேர்வு
5 .GROUP-I-ல் அடங்கிய  பணிகளுக்கான  தேர்வு
6 .GROUP-II-ல் அடங்கிய  பணிகளுக்கான  தேர்வு
7 .DEO (மாவட்ட கல்வி அலுவலர்) தேர்வு
8 .LABOUR OFFICER தேர்வு 
    
வெளியிடத் தயாராகும் தேர்வு முடிவுகள் :
    கொள்குறி வகையிலான எழுத்துத் தேர்வுகள் முடிந்து, நேர்முகத் தேர்வுக்கான முடிவுகள் இன்னமும் வெளியிடப்படாத கீழ்கண்ட தேர்வுகளுக்கான முடிவுகளையும் விரைந்து வெளியிட தேர்வாணைய தலைவர் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1 .FOREST  APPRENDICE  தேர்வு.
2 .LABOUR OFFICER தேர்வு 
3. மாற்றுத் திறனாளிகளுக்கான GROUP-IV தேர்வு .
4 .Asst.Public Prosecutor தேர்வு .
5 .Child Development Project Officer தேர்வு
 
        மேலும் 2011 ஆம் ஆண்டில் நடந்த அதிக புகார்களுக்குள்ளான ஓரிரு தேர்வுகள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் மாவட்ட ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கும் VAO தேர்வாளர்களுக்கு மிக விரைவிலும்,  GROUP-II தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் தேர்வாளர்களுக்கு சர்ச்சைக்குரிய 186  ASO பணியிடங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் முடிவுக்குப் பின்னரும் ஆணைகள் வழங்கப்படலாம் என தெரியவருகிறது.
 

No comments:

Post a Comment