Monday 19 March 2012

VAO :மாவட்ட வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு


       கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் காலியாக இருந்த வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. பொதுப் பிரிவில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 384 இடங்களுக்கு தேர்வு நடந்தது. அதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான ஆயிரத்து 77 குறைவு காலிப் பணியிடங்களும் அடக்கம். 7 லட்சத்து 76 ஆயிரத்து 156 பேர் தேர்வினை எழுதினர்.தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு வெளியாகின.  தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணியிடங்களை ஒதுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தேர்வில் வெற்றி பெற்ற அனைவரின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3 முதல் 18-ம் தேதி வரையிலும், செப்டம்பர் 26 முதல் 30 வரையிலும் நடைபெற்றன. 
 
 இணையதளத்தில் வெளியீடு: இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெயரும், வி.ஏ.ஓ.க்களின் தேர்வெண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.  மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்தப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒவ்வொரு கோட்டம் வாரியாக வி.ஏ.ஓ.க்களை பிரித்து அளிப்பார். இறுதி உத்தரவுகளை கோட்டாட்சியர்கள் பிறப்பிப்பார்கள்.  அவர்களிடம் இருந்து உத்தரவுகளைப் பெற்ற வி.ஏ.ஓ.க்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 45 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி அடுத்த வாரத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment