Friday 23 December 2011

1150 வேளாண்மை அலுவலர்கள் விரைவில் நியமனம்

1150 வேளாண்மை அலுவலர்கள் நியமிக்க உத்தரவு


             தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் 1,150 வேளாண் அலுவலர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வேளாண் துறையில் இணை இயக்குனர், உதவி இயக்குனர் உள்பட ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. முழு நேர காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைக்கு பதிலாக, ஒன்றிய அளவில் தொகுப்பூதியத்தில் வேளாண் அலுவலர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

வேளாண் பாடத்தில் டிப்ளமோ, பி.எஸ்.சி மற்றும் எம்.எஸ்சி. பட்டம் பெற்றவர்களை, தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து, தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஊதிய விவரம் :

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், பி.எஸ்சி. முடித்தவர்களுக்கு ரூ.8,500, எம்.எஸ்சி. முடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரம் என தொகுப்பூதியம் வழங்கப்படும் என தெரிகிறது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, நேர்காணல் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் ஆட்கள் தேர்வு நடைபெறும்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 3 பேர் வீதம் பணி நியமனம் நடைபெறும். அதன்படி, தமிழகம் முழுவதும் 385 ஊராட்சி ஒன்றியங்களில் 1,150 வேளாண் பட்டதாரிகள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். ஒன்றிய அளவில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களின் கட்டுப்பாட்டில் இவர்கள் பணியாற்ற உள்ளனர்.


வேளாண் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள், இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment