Friday 23 December 2011

VAO பணி நியமனம்! தடை நீக்கம்




 

அப்பாடா.. தீர்ப்பு.
        குரூப் II மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட  இரு  வேறு வழக்குகளில்  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  VAO பணி நியமனத்திற்கு இருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. குரூப் II தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறு வார காலத்திற்குள்ளாகவும், வி.ஏ.ஓ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதே ஆறு வார காலத்திற்குள்ளாகவும் பணி நியமனம் வழங்கவேண்டும் என்று நீதிபதி சுகுணா உத்தரவிட்டுள்ளார்.  இதனால் குரூப் II மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைக்காக காத்திருந்த சுமார் 5000 பேர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

       இருப்பினும் சென்னை உயர்நீதி மன்றத்தில் செல்லமுத்து காலத்தில் நடந்த தேர்வுகள் அனைத்தும்  ரத்து செய்யப்படவேண்டும்  எனக் கோரி ஏற்கனவே தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கின் இறுதி முடிவுக்கு இந்த தீர்ப்பு உட்பட்டது.  இவர்கள் அனைவருக்கும்  காலந்தாழ்த்தாமல் உடனடியாக  பணி நியமன ஆணை வழங்கப்படவேண்டும் என்று நாமும் நமது கட்டுரைகளில் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. (காண்க: TNPSC  தில்லுமுல்லுகள் ).

No comments:

Post a Comment