Tuesday 27 December 2011

TNPSC GROUP-1 தேர்வு முடிவு விரைவில்...

TNPSC GROUP-I தேர்வு முடிவு விரைவில் வெளியீடு 
        2011  ஜூன் மாதம் நடைபெற்ற TNPSC GROUP-I முதனிலைத் தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. விடைத் தாள்கள் திருத்தும் பணி ஏற்கனவே முடிவுற்ற நிலையில், தற்போது தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான(PERSONS STUDIED IN TAMIL MEDIUM) 20 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பணிகள் முடிவடைந்ததும் முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. இதன்மூலம் சுமார் 2680 பேர் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். சப் கலெக்டர் பதவியில் SC/ST  பிரிவினருக்கான 23 பின்னடைவுப் பணியிடங்கள் உட்பட பல்வேறு துறைகளில் மொத்தம் 134  பணியிடங்களுக்கான GROUP-I முதனிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

1 comment:

  1. தேர்வாணைய தொடர்புகள், குருப் 1 தேர்வு முடிவுகள் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் எதிர்பார்க்க கூறினர்.

    ReplyDelete