Monday 23 January 2012

TNPSC CHAIRMAN பொறுப்பேற்றார்.

தேர்வுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என அறிவிப்பு.
சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணைய தேர்வுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் ஆர்.நடராஜ். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "தேர்வாணைய தேர்வு முறையில் வெளிப்படையான  அணுகுமுறை பின்பற்றப்படும்.

தேர்வு விடைத்தாள் கோரி விண்ணப்பித்தால் திருத்தப்பட்ட விடைத்தாள் வழங்கப்படும். தேர்வுகளுக்கான திட்டமிட்ட கால அட்டவணை முறைப்படி பின்பற்றப்படும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஒரு முறை விண்ணப்பித்தால் போதும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியே புதிய விண்ணப்பம் வழங்க தேவையில்லை. தேர்வுகள் அனைத்தும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்," என்றார் ஆர்.நடராஜ்.

தமிழக அரசு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை:
   
         இதனிடையே டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதன் உறுப்பினர்கள் லெட்சுமணன், பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த தடை விதித்ததுடன், உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்தனர். இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டது.


TNPSC வழக்குகள் ஒத்திவைப்பு:
       டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணை மூன்று வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணையை மூன்று வாரத்துக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment