Monday 16 January 2012

TNPSC ஊழல் :தேர்வுகள் ரத்தாகுமா ?

TNPSC ஊழல் :தேர்வுகள் ரத்தாகுமா ? 
   எப்போதும்  இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஊழல் மலிந்து, அதன் தொடர்ச்சியாக இதுவரை நான்கு கட்ட ரெய்டுகள் நடந்துள்ளன. ரெய்டுகளில் கிடைத்த ஆதாரங்கள் பற்றி கண்காணிப்புத்துறை ரகசியம் காக்கிறது. அவற்றை அவர்கள் நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிப்பார்கள். அப்போதுதான் ஊழலின் ஒட்டுமொத்த பரிமாணமும் தெரியவரும். அதுமட்டுமல்லாமல் முறைகேடு  செய்தவர்கள், முறைகேட்டுக்கு  துணை நின்றவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படலாம். இதற்கிடையில் குரூப் -1 மற்றும் குரூப் -2 தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று ஒரு தொலைக்காட்சி ஊடகத்தில் வெளியான தகவல் போட்டித் தேர்வாளர்களிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 தேர்வுகள் ரத்தாகுமா ?
         2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குரூப் -1 மற்றும் குரூப் -2 தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் உள்ளவர்கள், VAO தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் உள்ளவர்கள், கால்நடை  மருத்துவர்களின்  வீடுகள் மட்டுமல்லாது சமீபத்திய குரூப் -1 மற்றும் குரூப் -2  தேர்வுகளை எழுதி முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுள்ளதால், அங்கெல்லாம் கிடைக்கப்பெற்ற சான்றாவணங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களுமே   தேர்வுகள் ரத்தாகுமா?  என்ற கேள்விக்கு விடையை தர வல்லன.  இருப்பினும் முறைகேடாக பணியில் சேர்ந்தோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்து , அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவிட்டால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு  கைது நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்படலாம். அப்போது தேர்வுகள் ரத்து செய்யப்படும் நிலை எழாது. ஒரு வேளை  முறைகேடாக பணியில் சேர்ந்தோரின் எண்ணிக்கை அறுதியிட்டு கூற முடியாத அளவுக்கு பெருமளவில் இருந்து அவர்களில் சிலர் சிக்கியும் சிலர் சிக்காமலும் உள்ள நிலை வருமானால், அந்நிலையில் அரசு ஏற்கனவே நடந்த தேர்வுகளை ரத்து செய்துவிட்டு மறு தேர்வுக்கு உத்தரவிடலாம் என்பதே தற்போதுள்ள நிலை. என்ன நடந்தாலும் அது விரைவில் நடந்து தேர்வாணையம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
      

No comments:

Post a Comment